2011ஆம் ஆண்டு தமிழில் க்ரிஷ் இயக்கத்தில் சிலம்பரசன், அனுஷ்கா, பரத் ஆகியோர் இணைந்து நடித்த படம் ‛வானம்’. இது தெலுங்கில் வெளியான ‛வேதம்’ படத்தின் ரீமேக் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் குறித்து இயக்குநர் க்ரிஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது: “‛வேதம்’ திரைப்படம் அக்காலத்தில் தெலுங்கில் வெளிவந்த ஒரு அந்தாலஜி படம். அந்தப் படத்தை பார்த்த பிறகு சிலம்பரசன் என்னை தொடர்புகொண்டு, இதை தமிழில் ரீமேக் செய்யலாம் என்று கேட்டார். அதன் பிறகுதான் ‛வானம்’ உருவானது.
அந்தப் படத்தை விடிவி கணேஷ் தயாரித்தார். சிம்பு சார் மிகச் சிறப்பாக நடிக்கக்கூடியவர். அவருடன் அந்நாளில் நட்பு உருவானது. இன்றும் நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். நான் எடுக்கிற ஒவ்வொரு படத்தையும் அவர் பார்த்து, எனக்கு பாராட்டுச் செய்திகளை அனுப்புவார்” எனத் தெரிவித்துள்ளார்.