Thursday, October 24, 2024

கங்குவா படத்தில் சூர்யாவின் இரட்டை கதாபாத்திரங்கள் எப்படி இருக்கு? வாங்க பாப்போம்! #Kanguva

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் மிகப்பெரிய திரைப்படம் ‘கங்குவா’. இது பாகுபலி மற்றும் கேஜிஎப் போன்ற ஸ்டைலில் பேண்டசி த்ரில்லராக உருவாகி வருகிறது. இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுடன் பாபி தியோல், திஷா பதானி, நட்டி, ஜெகபதி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் அமைக்க, ஒளிப்பதிவை வெற்றி பழனிசாமி செய்துள்ளார். படம் வரும் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. சூர்யா இந்தப் படத்தில் பிரான்சிஸ் மற்றும் கங்குவா என்ற இரு கதாபாத்திரங்களில் தோன்றுகிறார். இரு கதாபாத்திரங்களிலும் அவர் நடிப்பு, தமிழ் உச்சரிப்பு ஆகியவற்றில் மிகவும் வித்தியாசங்களை காட்டியுள்ளார். கதை நிகழ்காலத்தில் தொடங்கி, பிளாஷ்பேக்காக செல்லும். பிரான்சிஸ் கதாபாத்திரம் நிகழ்காலத்தில் வாழும் ஒரு இளைஞனை குறித்தது. பிரான்சிஸ் சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பார். அங்கு திஷா பதானி அவரின் காதலியாக நடிக்கிறார். இதன்பின் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய கங்குவாவின் போர்ஷன் படமாக்கப்பட்டது.

‘கங்கு’ என்றால் நெருப்பு, அது பற்றியவுடன் கட்டுப்படுத்த முடியாத அளவிற்குப் பரவும். அப்படி கட்டுக்கடங்காதவர்தான் கங்குவா. இந்தக் கதை இரண்டு காலகட்டங்களில் நடைபெறும். 2024ல் நடக்கும் கதை ஒரு பகுதி. மற்றொரு பகுதி 1500 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தது. எந்தக் காலத்தில் நிகழ்ந்தது என்று சொல்லமுடியாத காலகட்டத்தில் நடக்கிறது. ‘ஏழாம் அறிவு’ படத்திற்கு சூர்யா சிக்ஸ் பேக் வைத்திருந்தார். தற்போது ‘கங்குவா’விற்காக மீண்டும் சிக்ஸ் பேக் வைத்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News