Friday, November 1, 2024

‘ப்ளடி பெக்கர்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ப்ளடி பெக்கர் படத்தில் ஏமாற்று பிச்சைக்காரராக இருப்பவர் கவின். ஒரு பிரம்மாண்ட மாளிகை வீட்டின் முன்பு நடந்த அன்னதான விருந்தில் கலந்து கொள்கிறார். அந்த வீட்டைப் பார்த்து ஆசைப்பட்டு அதற்குள் நுழைகிறார். ஆனால், வெளியில் வர முடியாமல் மாட்டிக் கொள்கிறார். அந்த வீட்டின் சொத்தைப் பிரிப்பதற்காக வாரிசுகள் பலத்த சதித் திட்டம் தீட்டுகிறார்கள். அவர்களுக்கிடையில் சிக்கும் கவின் என்ன ஆனார் என்பதே படத்தின் கதை.

பிச்சைக்காரத் தோற்றத்தை நிஜமாகக் கொண்டு வர தோற்றத்தில், உடையில், நடையில், பேச்சில் என தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் கவின். பிச்சைக் கேட்கும் போது பேசும் நக்கல் எல்லாம் நன்றாகவே உள்ளது. அதன்பின்பு அந்த பிரம்மாண்ட மாளிகையில் சிக்கிய பின் அந்த சொத்துக்களின் வாரிசு என நாடகமாட வைக்கப்படுகிறார்.

அப்போது பிச்சைக்காரன் தோற்றத்திலிருந்து கொஞ்சம் மாறி பார்க்க பேண்ட் சட்டை போட்ட கிராமத்து அப்பாவி போல தெரிகிறார். சொத்துக்காக சண்டை போடும் வாரிசுகளிடமிருந்து தப்பித்து ஓடிக் கொண்டேயிருப்பதுதான் பாதிப் பட நடிப்பாக இருக்கிறது.

படத்தில் கவினைத் தவிர்த்து நமக்குத் தெரிந்த முகம் என்றால் ரெடின் கிங்ஸ்லி. அதே கத்தல், கூச்சல் என ஒரே மாதிரி நடிப்பில் எரிச்சல் தருகிறார். ரெடினை காமெடியன் என்று சொல்கிறார்கள். இப்படி நடித்தால் இன்னும் எத்தனை படம் தாங்குவாரோ ?. சொத்துக்காக சண்டை போடும் வாரிசுகளாக ஒரு பெரும் கூட்டமே நடித்திருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வித்தியாசமாக நடித்திருக்கிறார்கள். ஆக மொத்தம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நிச்சயம் கவினின் இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்திற்காக இப்படத்தை பார்க்கலாம்.

- Advertisement -

Read more

Local News