Touring Talkies
100% Cinema

Friday, May 2, 2025

Touring Talkies

‘ஹிட்‌ 3’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விசாகப்பட்டினத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றும் நானி, ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்படுகிறார். சிறையில் இருக்கும் வேறு ஒரு கைதியிடம், தன்னால் ஏன் சிறையில் அடைக்கப்பட்டேன் என்பதை கூறுகிறார்.

இந்த பின்விளக்கக் காட்சியில், காஷ்மீரில் நடந்த கொலை வழக்கை நானி விசாரிக்க தொடங்குகிறார். அதே போன்று, பல்வேறு இடங்களில் ஒரே மாதிரியான கொலைகள் நடக்க ஆரம்பிக்கின்றன. இந்த கொலைகள் எதற்காக நடக்கின்றன, யார் இதற்குப் பின்னணி என்பதைக் கண்டறிய, அவர் தனது புலனாய்வை தொடங்குகிறார். இதற்காக பீகார், குஜராத், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு பயணித்து விசாரணை செய்கிறார். அப்போது அவர் எதிர்பாராத அதிர்ச்சி தகவலை வெளிக்கொணர்கிறார். மிகப் பெரிய நெட்வொர்க்காக செயல்படும் அந்த அமைப்பை நானி எவ்வாறு பிடித்தார்? அந்த அமைப்பில் உள்ளவர்கள் யார்? அவர்கள் இந்த கொலைகளை ஏன் செய்கிறார்கள்? நானி ஏன் கொலை வழக்கில் சிறை சென்றார்? என்பதே கதையின் மீதிப் பகுதியாகிறது.

‘ஹிட்’ திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களை, பெரிய நடிகர்களை வைத்து அல்லாமல், சுத்தமான இன்வெஸ்டிகேட்டிவ் கிரைம் திரில்லராக இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கியிருந்தார். ஆனால் ‘ஹிட் 3’ பாகத்தில் நானி போன்ற பிரபலமான நடிகர் வரும்போது, கதைக்கு ஹீரோயிசமும் ஆக்ஷனும் அதிகமாக தேவைப்பட்டுள்ளதாக படம் பார்த்தபோது புரிகிறது.படத்தின் பெரும்பகுதி ரத்தக் காட்சிகளாக காணப்படுகிறது. ‘ஹிட் 3’ படத்தை முழுக்க முழுக்க நானியை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ளார் இயக்குனர். ஆனால் அதே நேரத்தில், திரைக்கதை சரியாக ஓட்டப்படுவதால், படம் விறுவிறுப்பாக நகர்கிறது. மேலும், அடுத்த பாகத்திற்கு முன்பே வழிகாட்டும் வகையில், ஒரு முன்னணி தமிழ் நடிகரை காட்டி, பார்வையாளர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுக்கப்படுகிறது. போலீசாகவே இருந்தாலும் காக்கி சட்டை இல்லாமல் நடிக்கும் நானி, நம் மனதில் நீங்கா வகையில் நடித்துள்ளார். படம் முழுவதும் நானியின் தனிப்பட்ட நடிப்பு சீராகவே இடம்பெறுகிறது.

‘கேஜிஎப்’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, நானியின் காதலியாகவும், போலீசாகவும் நடித்துள்ளார். இரண்டாம் பாதியில் அவருக்கு சிறந்த வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. பிரதீக் பாபர் வில்லனாக கவனம் ஈர்க்கும் வகையில் நடித்துள்ளார். அவர்களுடன் சூர்யா ஸ்ரீநிவாஸ், அடில் பாலா, ராவ் ரமேஷ், சமுத்திரக்கனி, கோமலி பிரசாத் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

பின்னணி இசையில் மிக்கி ஜே மேயர் சிறப்பாக பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவாளராக கார்த்திகா ஸ்ரீனிவாஸ் காஷ்மீர், பீகார், குஜராத் ஆகிய மாநிலங்களை அழகாக படமாக்கியுள்ளார். அதோடு, ஆக்ஷன் காட்சிகளும் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

Read more

Local News