தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வளம் வருபவர் ஹிப்ஹாப் தமிழா. இசையமைப்பில் மட்டுமல்லாமல், நடிகராகவும் பிரபலமான இவர், கடந்த ஆண்டு இயக்கி, தயாரித்து நடித்த ‘கடைசி உலகப்போர்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிபடமாக மாறியது. இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார்.
தற்போது, ஹிப்ஹாப் தமிழா புதிய ஒரு இண்டிபெண்டண்ட் பாடலை வெளியிட்டுள்ளார். ‘Certified Self Made’ என தலைப்பிட்ட இந்த பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியிடப்பட்டது. பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த பாடலின் வரிகளை ஹிப்ஹாப் தமிழா எழுதியுள்ளார். அதில் நடிகர் அஜித்தை புகழ்ந்து பேசும் வரிகள் இடம்பெற்றுள்ளன, இது பாடலின் முக்கிய அழகாக மாறியுள்ளது. பாடலின் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.சமீபத்தில் நடிகர் அஜித் துபாயில் நடைபெற்ற 24 H கார் பந்தயத்தில் மூன்றாவது இடம் பிடித்து அசத்தினார். தற்போது இந்த நிகழ்வையும் இப்பாடலையும் ரசிகர்கள் கனெக்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.