ஹிந்தி மொழியில் தயாராகி உள்ள ரொமாண்டிக் காமெடி படம் ‘பிண்டு கி பப்பி’. சுஷாந்த், ஜான்யா ஜோஷி மற்றும் விதி, விஜய் ராஸ், முரளி ஷர்மா, சுனில் பால், அலி அஸ்கர், அஜய் ஜாதவ், பூஜா பானர்ஜி, அதிதி சன்வால், ரியா எஸ்.சோனி, ஊர்வசி சவுஹான், பியூமோரி மேதா தாஸ், முக்ஷ்வர் மேத்தா தாஸ் மற்றும் கணேஷ் ஆச்சார்யா ஆகியோர் நடித்துள்ளனர். வி2எஸ் பிக்சர்ஸ் சார்பில் விதி ஆச்சார்யா தயாரித்துள்ளார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடுகிறது. வருகிற 21ம் தேதி இந்தியா முழுவதும் ஒரே நாளில் வெளியாகிறது. தென்னிந்திய மொழிகளில் படத்திற்கு ‘கிஸ் கிஸ் கிஸிக்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
