சின்னத்திரையில் ‘இதயத்தை திருடாதே’ சீரியலின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹிமா பிந்து. அந்த தொடரில் சஹானா என்ற கதாபாத்திரத்தில் நடித்து, பல லட்சம் ரசிகர்களின் ஆதரவை பெற்றார். தமிழ்நாட்டில் தனி ரசிகர் கூட்டம் இருக்கும் அளவிற்கு புகழ் பெற்றார். தொடர்ந்து, ‘இலக்கியா’ தொடரில் நடித்து வந்த அவர், திரைப்பட வாய்ப்புகள் அதிகமாக வந்ததால், சின்னத்திரையை விடைபெற்று, திரைப்படங்களுக்கு முழுமையாக மாறினார்.


அதன் பிறகு, கவுண்டமணி நடித்த ‘ஒத்த ஓட்டு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் தொடர்ந்து, ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 4’ படத்திலும் சேர்ந்து நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஏற்கனவே பூஜா ஹெக்டே, நோரா பதேகி போன்ற பிரபல நடிகைகள் நடித்து வந்த நிலையில், ஹிமா பிந்துவும் அவர்கள் உடன் இணைந்து நடிப்பது, தமிழ் சினிமாவில் அவருக்கு மிகப்பெரிய வளர்ச்சியாக அமையும் என திரையுலகத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
images Link : https://www.instagram.com/p/DG0ZeSmz5L-/?img_index=1&igsh=Nm8wMzk3aXI0azhk
இந்நிலையில், அண்மையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவருடைய லுக்கைப் பார்த்த ரசிகர்கள், “தமிழ் சினிமாவிற்கான அடுத்த கதாநாயகி ரெடி!” என்று புகழ்ந்து, வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.