கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ மற்றும் ‘ராமாயணா’ திரைப்படங்களில் தற்போது கன்னட நடிகர் யஷ் நடித்து வருகிறார். இதில் டாக்ஸிக் படத்தின் படப்பிடிப்பு மும்பை மற்றும் பெங்களூரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தில் யஷ் உடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹியூமா குரேஷி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.

இந்நிலையில், டாக்ஸிக் திரைப்படத்தில் யஷ் மேல் சட்டை அணியாமல் நடித்திருந்த ஒரு காட்சி சமூக வலைதளங்களில் கசிந்து வெளியானது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியதால், அது படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தின் பின்னர், படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் மும்பை மற்றும் பெங்களூர் செட்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டுள்ளன. பிரபல தயாரிப்பு நிறுவனம் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் இந்த டாக்ஸிக் திரைப்படம் 2026 மார்ச் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.