ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தில் ரச்சிதா ராம் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். பொதுவாக கன்னடத்தில் கதாநாயகியாக நடித்துவரும் அவர், இந்த படத்தில் “கல்யாணி” என்ற வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

இந்த கதாபாத்திரத்திற்கு கிடைத்த பாராட்டுகளுக்கு ரச்சிதா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில்,
“கூலி படத்தில் எனது கல்யாணி கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு நம்ப முடியாத அளவிற்கு அற்புதமாக இருந்தது. அதற்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். என்னை ட்ரோல் செய்தவர்களுக்கும் மீம்ஸ் உருவாக்கியவர்களுக்கும் நன்றி. என்மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு நன்றி. சினிமாவின் ஜாம்பவான்களுடன் இணைந்து பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. கூலி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு படக்குழுவிற்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.