தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த தீபா பாலு. டாக்டர் பட்டம் பெற்ற இவருக்கு நடிப்பில் அதிக ஆர்வம் இருப்பதால், டாக்டர் சேவையை மேற்கொள்ளும்போதே யூடியூப்பில் வெளியான சில குறும்படங்களில் நடித்துள்ளார். அதில் ‘தேன் மிட்டாய்’ எனும் தொடரில் நடித்தது பாராட்டை பெற்றது.

தற்போது ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் ‘ஹார்ட் பீட்’ தொடரில் டாக்டராகவே நடித்துவருகிறார். அவரின் கதாப்பாத்திரமான ‘ரீனா’ பெரும் பிரபலமடைந்துள்ளது. இதையடுத்து, திரைப்படங்களில் நடிக்கத் தயாராகிறார்.
இதுகுறித்து தீபா கூறும்போது, “தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கக்கூடிய வலுவான கதாப்பாத்திரங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வழியில் நடிகைகள் ரேவதி, நதியா, ஜோதிகா, சாய் பல்லவி போன்றோர் எடுத்துச்செல்லும் பாதையில் நானும் தரமான கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க விரும்புகிறேன். நடிப்புத் திறமையை நிரூபிக்கும் கதாப்பாத்திரங்கள் வந்தால், முழுமையாக அதில் இணைந்து நடிக்கத் தயார். தற்போது பல வாய்ப்புகள் வருகின்றன, கதைகள் கேட்டு வருகிறேன். விரைவில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிவித்தார்.