நடிகர் சோனு சூட் பாலிவுட் திரைப்படங்களில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதோடு, தமிழில் சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். விஜயகாந்துடன் ‘கள்ளழகர்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்குள் அவர் அறிமுகமானார்.

தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில், ‘கள்ளழகர்’ படத்தில் விஜயகாந்துடன் நடித்த அனுபவத்தைப் பற்றி பேசினார். அவர் கூறியதாவது, “கள்ளழகர் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று விஜயகாந்த் முடிவெடுத்தார். ஆனால், எனக்கு சண்டைப் பயிற்சி இல்லையென்பதை அறிந்தவுடன், படப்பிடிப்பை ஒரு மாத காலம் நிறுத்திவைத்தார்.
அவரது தனிப்பட்ட கவனிப்பினால், என் முதல் படத்திலேயே மிகுந்த ராஜ மரியாதை மரியாதை பெற்றவன் நானாக இருந்தேன்.மொழி கடந்த அன்பை அவரிடம் பெற்றேன். அவரைப் போல் உபசரிப்பில் நானும் மற்றவர்களிடம் நடக்க முயல்கிறேன். எனக்கு மிகப்பெரிய ஆற்றலளிப்பவரும், உண்மையான உத்வேகம் தருபவருமாக விஜயகாந்த் இருந்தார். அவர் கடவுளின் குழந்தை,” என்று உருக்கமாக தெரிவித்தார்.