Friday, October 4, 2024

அட தளபதி 69 படத்தோட தொழில்நுட்ப கலைஞர்கள்ல பாத்தீங்களா… செம்ம டீம்மா இருக்கே! #Thalapathy69

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘கோட்’ படத்தை தொடர்ந்து, எச். வினோத் இயக்கத்தில் விஜய் தனது 69வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜயுடன் சேர்ந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரியாமணி, நரேன், கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது விஜயின் 69வது படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பில், இசையமைப்பாளர் அனிருத், ஒளிப்பதிவாளராக சத்யம் சூரியன், ஸ்டண்ட் மாஸ்டராக அனல் அரசு, கலை இயக்குநராக செல்வகுமார், எடிட்டராக பிரதீப் ராகவ், ஆடையமைப்பாளராக பல்லவி, பப்ளிசிட்டி டிசைனராக கோபி பிரசன்னா ஆகியோர் தேர்வாகியுள்ளார்கள். இன்றைய பூஜை நிகழ்ச்சிக்குப் பிறகு, இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News