‘சயாரா’ படத்தில் கதாநாயகியாக நடித்த அனீத் பத்தா, தனது சிறந்த நடிப்பால் பெரும் பாராட்டைப் பெற்றார். தற்போது அவர், சக்தி ஷாலினி என்கிற ஹாரர்-காமெடி படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் பரவியது. இந்த படத்தில் முதலில் கியாரா அத்வானி நடிக்கவிருந்ததாக கூறப்பட்ட நிலையில், அதற்குப் பதிலாக அனீத் பத்தா தேர்வாகியுள்ளார் என செய்திகள் வெளியாகின. ஆனால், இதுகுறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதற்கிடையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் மேடோக் பிலிம்ஸ் விளக்கம் அளித்துள்ளது. அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், “எங்கள் ஹாரர்-காமெடி படம் மீது பார்வையாளர்களின் உற்சாகத்தை நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், சக்தி ஷாலினி படத்தின் நடிகர்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் ஊகங்கள் மட்டுமே. ஊடகங்கள் தவறான தகவல்களைத் தவிர்த்து, அதிகாரபூர்வ அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.