பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மகன் சாமுவேல் நிக்கோலஸ் தந்தை வழியில் தானும் இசை அமைப்பாளராகிறார். அதற்கு முன்னோட்டமாக தற்போது ‘ஐயையோ’ என்ற இசை ஆல்பத்தின் மூலம் தனது முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார். இந்த ஆல்பத்திற்கு இசை அமைத்து பாடி, நடித்தும் உள்ளார். இந்த ஆல்பத்தை முன்னணி இசை நிறுவனமான திங்க் மியூசிக் வெளியிட்டுள்ளது. ‘ஐயையோ’ பாடலை மோகன்ராஜ் மற்றும் சாமுவேல் நிக்கோலஸ் இணைந்து எழுத, சனா மரியம் இயக்கியுள்ளார். ஜாயித் தன்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்,
