தமிழில் ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ என இரு வெற்றி படங்களை வழங்கியுள்ள ஹரிஷ் கல்யாண், தற்போது தனது கைவசம் ‘நூறு கோடி வானவில்’, ‘டீசல்’ உள்ளிட்ட படங்களைக் கொண்டுள்ளார்.

இவற்றிற்கு அப்பாற்பட்ட வகையில், ‘லிப்ட்’ பட இயக்குனர் வினித் வர பிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் தனது 15வது திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதுகுறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக பிரீத்தி முகுந்தன் நடிக்க, மலையாள நடிகர் செம்பியான் வினோத் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.