‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ போன்ற தொடர்ச்சியான வெற்றிப் படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் ஹரிஷ் கல்யாண். தற்போது அவர் நடிக்கும் ‘டீசல்’ திரைப்படம் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஹரிஷ் கல்யாணின் கேரியரில் மிக அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படம் ஆக்ஷன் மற்றும் திரில்லர் வகையில் உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்கியவர் சண்முகம் முத்துச்சாமி. இதில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஓய் தீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திலிருந்து வெளியிடப்பட்ட ‘பீர் கானா’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, தணிக்கை வாரியம் ‘டீசல்’ திரைப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் முன்னொரு காலத்தில் சென்னை நகரில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.