‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ போன்ற ஹிட் படங்களுக்குப் பிறகு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் ஹரிஷ் கல்யாண் தற்போது ‘டீசல்’ என்ற ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை சண்முகம் முத்துச்சாமி இயக்கியுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
படம் வருகிற அக்டோபர் 17ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதற்கிடையில், ‘டீசல்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் இயக்குநர் மிஷ்கின் கலந்துகொண்டு, “கமல் ஹாசன் சாருக்குப் பிறகு, ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவின் மிகவும் அழகான நடிகர்களில் ஒருவர். இன்னும் பத்து ஆண்டுகளில், அவர் ஒரு சிறந்த ஹீரோவாக உயர்வார்” என்று பாராட்டினார்.