Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ராதிகா ஆப்தே சொன்ன ஹாப்பி நியூஸ்… என்னன்னு தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தி, தெலுங்கு, தமிழ், ஆங்கில படங்களில் நடித்து வரும் நடிகை ராதிகா ஆப்தே, பா. ரஞ்சித் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான “கபாலி” படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார். ராதிகா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த இசை கலைஞர் பெனடிக்ட் டெய்லர் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள்.

திருமணத்திற்கு பிறகு, பெனடிக்ட் இங்கிலாந்தில் வாழ, ராதிகா மும்பையில் வசித்து வருகிறார். அவ்வப்போது ராதிகா லண்டன் சென்று தனது கணவரை சந்தித்து வருகிறார். இதனால் அவர்களுக்குள் நல்ல உறவில்லையாம், இது சும்மா சொல்லப்படுவதுதான் என்று சிலர் பேசினார்கள். ஆனால், ராதிகா அவ்வாறான விமர்சனங்களை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், லண்டனில் நடைபெற்று வரும் பி.எஃப்.ஐ. லண்டன் திரைப்பட விழாவில் ராதிகா ஆப்தே கலந்து கொண்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில், ராதிகா கர்ப்பமாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News