Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா..,நீங்கள் ஒரு அபூர்வமான வைரம்… உலகநாயகனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த மகள் ஸ்ருதிஹாசன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மநீம கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதில், கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் தன் தந்தையுடன் இருக்கும் புகைப்படத்துடன், “பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா. நீங்கள் ஒரு அபூர்வமான வைரம். உங்கள் பக்கத்தில் நடப்பது என் வாழ்க்கையின் முக்கிய விருப்பங்களில் ஒன்று. உங்கள் மாயாஜால கனவுகள் நிறைவேறுவதை மகிழ்ச்சியுடன் காண்கிறேன். உங்களை மிகவும் நேசிக்கிறேன் அப்பா” என வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

கமல்ஹாசன் தனது திரையுலக வாழ்க்கையை 1960ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படமான ‘களத்தூர் கண்ணம்மா’வில் குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கினார். நான்கு தேசிய திரைப்பட விருதுகள், ஒன்பது தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், நான்கு நந்தி விருதுகள், ஒரு ராஷ்டிரபதி விருது, இரண்டு பிலிம்பேர் விருதுகள் மற்றும் பதினெட்டு பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 1984 இல் கலைமாமணி விருது, 1990 இல் பத்மஸ்ரீ, 2014 இல் பத்ம பூஷன் ஆகிய விருதுகளையும் வென்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News