தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா மோத்வானி, கடந்த 2022ம் ஆண்டு தொழிலதிபர் சோஹைல் கட்டாரியாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களின் திருமணம் ஜெய்ப்பூரில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதற்குப்பின், சமீபத்தில் ஹன்சிகா தனது கணவரை விலகி விட்டதாக செய்திகள் பரவி வருகின்றன. தற்போது, கணவர் வீட்டிலிருந்து வெளியேறி, மும்பையில் தனது தாயுடன் தங்கியுள்ளாராம். இந்தப் பிரிவுக்குக் காரணம் கணவர் வீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளாக கூறப்படுகிறது.

மேலும், ஹன்சிகா விரைவில் விவாகரத்து முடிவை எடுக்கலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. ஆனால், சோஹைல் கட்டாரியா இந்த தகவலை மறுத்துள்ளார். அவர் மறுத்தபோதும், இந்த விவகாரத்தில் ஹன்சிகா மவுனமாக இருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது.
இந்த நிலையில், தனது சமூக வலைதளங்களில் கணவருடன் இருந்த புகைப்படங்களை ஹன்சிகா நீக்கியுள்ளார். இதனால், விவாகரத்து குறித்த செய்திகள் வலுப்பெற்றுள்ளன. ஹன்சிகா இப்போது தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டதாகவே திரையுலகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.