ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள படம் ‘குட் பேட் அக்லி’. இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இப்படத்திற்கு முன்பதிவுக்கான டிக்கெட்டுகள் மிகுந்த வேகத்தில் விற்பனை ஆகிக்கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் அதிகாலை 4 மணி மற்றும் காலை 7.30 மணிக்கான காட்சிகளுக்கு அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனால், தமிழகத்தில் இந்தப் படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கே திரையிடப்படுகிறது.
அதே நேரத்தில், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் அதிகாலை 4 மணி முதலே படம் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், இந்த மாதிரியான முன்கூட்டிய காட்சிகள் அண்டை மாநிலங்களில் நடைபெறும்போது, சமூக ஊடகங்களில் யாரேனும் எதிர்மறை விமர்சனங்களை பகிர்ந்தால், அது படத்தின் வசூலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் உள்ளது.
அதனாலேயே, இப்படத்தை தயாரித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், படம் தமிழகத்தில் காலை 9 மணிக்கே வெளியாகும் என்பதால், அதே நேரத்தில் அண்டை மாநிலங்களிலும் முதல் காட்சியை திரையிடும் திட்டத்தை வகுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.