Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

என்னது கோட் அந்த படத்தோட கதையா? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த இயக்குனர் வெங்கட்பிரபு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான ‘தி கோட்’ திரைப்படம், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்தப் படத்தில், விஜய்யுடன் சேர்ந்து சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, ப்ரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் விஜய் இரண்டு வேடங்களில், அப்பாவும் மகனுமாக நடித்திருந்தார். படம் வெளியான முதல்நாளில் இருந்தே, சமூக வலைதளங்களில் இது விஜயகாந்த் நடித்த ‘ராஜதுரை’ படத்தின் கதை என விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், இந்த விமர்சனங்களுக்கு இயக்குனர் வெங்கட்பிரபு பதிலளித்துள்ளார்.

அவர் இதுகுறித்து பேசுகையில், “‘தி கோட்’ படம் வெளியான பிறகுதான், அது ‘ராஜதுரை’ படத்தின் கதையைப் போல் இருப்பதாக எனக்கு தெரிந்தது. சமூக வலைதளங்களில் இந்த கருத்துகள் பரவியதைக் கண்டு, பின்னர் ‘ராஜதுரை’ படத்தைப் பார்த்தேன். அதற்கு முன் அந்தப் படத்தை பார்த்திருந்தால், ‘தி கோட்’ படத்தை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம். ‘ராஜதுரை’ படத்தை எப்படி பார்க்காமல் விட்டேன் என்பது எனக்கே தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News