நடிகை கரீனா கபூர், 2000ம் ஆண்டு வெளியான “ரெஃப்யூஜி” திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். முன்னணி கான் நடிகர்களுடன் இணைந்து பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்த அவர், சைஃப் அலி கானை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அவர் நடித்த முக்கியமான திரைப்படங்கள், தேவ், ஃபிடா, டான், கோல்மால் ரிட்டர்ன்ஸ், 3 இடியட்ஸ், ஜப் வி மெட், பாடிகார்ட், ரா ஒன், ரவுடி ரத்தோர், ஹீரோயின், தபங் 2, சிங்கம் ரிட்டர்ன்ஸ், ஹேப்பி எண்டிங், குட் நியூஸ், க்ரூ, சிங்கம் அகைன் என தொடந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.44 வயதாகும் கரீனா கபூர், சமீபத்தில் வெளியான “க்ரூ” திரைப்படத்திலும் தனது கவர்ச்சி நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார். இளமைக்காலத்தில், அவரது கிளாமர் பற்றிப் பேசவே தேவையில்லை. ஆனால், தனது 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில், நடிகர்களுடன் அதீத நெருக்கமான காட்சிகளில் பெரிதாக நடிக்கவில்லை என்றும், அது தேவையில்லாத ஒன்றாக உணர்ந்ததாகவும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, எந்த படமானாலும் கதை மற்றும் திரைக்கதை நல்லதாக இருந்தால்தான் அது வெற்றியடையும். கவர்ச்சி மற்றும் நெருக்கமான காட்சிகள் மட்டும் எந்தப் படத்தையும் ஓட வைக்க முடியாது. பொதுவாக, இத்தகைய கிளாமர் காட்சிகளில் நடிக்கும் போது எந்த நடிகையுமே முழுமையாக கம்ஃபர்டபிளாக உணரமாட்டார்கள். நான் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது, ‘இதன் மூலம் கதையில் என்ன மாற்றம் வரும்? இது நிச்சயமாக தேவையா?’ என்று தான் யோசிப்பேன். அதனால், முடிந்தவரை இப்படிப்பட்ட காட்சிகளில் நடிப்பதைத் தவிர்த்து வந்தேன் என கூறியுள்ளார்.