Touring Talkies
100% Cinema

Tuesday, July 1, 2025

Touring Talkies

நகைச்சுவை நடிகர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுங்கள்… நடிகர் விமல் வைத்த வேண்டுகோள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தயாரிப்பாளர் எழில் இயக்கும் ‘தேசிங்கு ராஜா 2’ திரைப்படத்தில் நடிகர் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் குறித்து விமல் கூறியதாவது, “எழில் சார் இயக்கும் படத்தில் மீண்டும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இசையமைப்பாளர் வித்யாசாகருடன் நான் இரண்டு படங்களில் மட்டும் அல்லாது, இரண்டே கால்களில் நடித்திருக்கிறேன். ஆம், ‘கில்லி’ படத்தில் ‘கொக்கர கொக்கரக்கோ’ என்ற பாடலில் நான் நடனமாடியிருந்தேன். எழில் சார் இயக்கத்தில் இது எனது இரண்டாவது படம்.

சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இயக்கத்தில் மீண்டும் இணைவது மிகவும் மகிழ்ச்சியானது. இதற்கு முன் நான் நடித்த ‘விலங்கு’ எனும் வெப்சீரிஸும், ‘போகும் இடம் வெகு தூரம் இல்லை’ படமும் சீரியஸ் கதைகளாக இருந்தன. அந்த வலிமையான கதைகளில் இருந்து சற்று ஓய்வு கொள்வது போல, இந்த ‘தேசிங்கு ராஜா 2’ படப்பிடிப்பு தளத்தில் வந்தவுடன் ஒரு புத்துணர்வு கிடைத்தது. படம் மிகவும் ரிலாக்ஸாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

இது எழில் சாரின் 25வது ஆண்டு படமாகும். அவர் தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடி, மேலும் பல நகைச்சுவை நடிகர்களுக்கு வாய்ப்பளித்து, இன்னும் அதிக உயரங்களை எட்ட வேண்டும். இப்படத்தில் நகைச்சுவை அம்சங்கள் மிகவும் சிறப்பாக வந்துள்ளன. 15க்கும் மேற்பட்ட நகைச்சுவை நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்” என தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News