தமிழில் ‘மிஸ்டர் எக்ஸ்’, ‘கிரிமினல்’ போன்ற படங்களில் நடித்துவரும் கவுதம் ராம் கார்த்திக், அடுத்ததாக ராஜூ முருகனின் உதவி இயக்குநராக பணியாற்றிய தினா ராகவன் என்பவர் இயக்கும் தனது 19வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்திற்கு ராஜூ முருகன் தான் வசனத்தை எழுதுகிறார்.
இந்த படம் தென் சென்னை பகுதியில் நிகழும் நகைச்சுவை கலந்து கொண்ட அரசியல் பின்னணியிலான கதையாக உருவாகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியதாகக் கவுதம் கார்த்திக் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.