கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை கவுரி கிஷன். தமிழில், 2018ஆம் ஆண்டு வெளியான விஜய் சேதுபதி நடித்த ‘96’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்தப்படத்தின் பின்னர், ‘மார்க்கம்களி’ என்ற ஒரு மலையாள படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு, விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அதன் தொடர்ச்சியாக, ‘பிகினிங்’, ‘அடியே’, ‘போட்’ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் கவுரி கிஷன், சமீபத்தில் ‘சுழல் 2’ வெப் தொடரில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த தொடரில், அவருடைய ஆக்சன் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில், அந்த சண்டைக் காட்சிகளுக்காக அவர் எப்படிப் பயிற்சி எடுத்தார் என்பதைக் காண்பிக்கும் வீடியோவை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.