Touring Talkies
100% Cinema

Saturday, May 31, 2025

Touring Talkies

மீண்டும் ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கங்குவா பட நடிகை திஷா பதானி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திஷா பதானி. இந்த படத்திற்கு பிறகு அவர் தொடர்ந்து இந்திப் படங்களில் நடித்துவரும் நிலையில், தற்போது பிரபல நடிகையாக வளர்ந்துள்ளார்.

திஷா பதானி இதற்கு முன்பு ஜாக்கி சானுடன் இணைந்து ‘குங்பூ’ மற்றும் ‘யோகா’ என்ற ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் ‘ஹாலிகார்ட்ஸ்’ எனும் ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் வகை ஹாலிவுட் படத்தில் நடித்துவருகிறார்.

இந்த படத்தை ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் கெவின் ஸ்பேசி இயக்குகிறார். இப்படத்தில் டால்ப் லண்ட்கிரென், டைரஸ் கிப்சன், பிரியானா ஹில்ட்பிராண்டு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம், படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மெக்சிகோவின் டுரோங்கா பகுதியில் நடைபெற்றது. தற்போது அந்த படத்தின் சில காட்சிகள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

- Advertisement -

Read more

Local News