Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேன்ஜர் ரிலீஸ் எப்போது? நீளும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடித்திருக்கும் தெலுங்குப் படம் ‘கேம் சேஞ்சர்’. கடந்த சில வருடங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

கிறிஸ்துமஸ் விடுமுறையின்போது இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவின. ஆனால், இதுவரை தயாரிப்பு நிறுவனத்தால் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

ஷங்கர் இயக்கிய ‘இந்தியன் 2’ படம் எதிர்பாராத விதமாக தோல்வியடைந்ததை தொடர்ந்து, அவர் ‘கேம் சேஞ்சர்’ படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகின்றன.அடுத்த இரண்டு மாதங்களில் அவை முடியும் என உறுதியாக கூற முடியவில்லை என்றும், இதனால் பட வெளியீடு குறித்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை என்றும் கூறப்படுகிறது. இப்படம் 2025ம் ஆண்டுக்குள் வெளியிட வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

- Advertisement -

Read more

Local News