Touring Talkies
100% Cinema

Sunday, June 29, 2025

Touring Talkies

விமல் நடிப்பில் உருவாகியுள்ள கலாட்டா Family திரைப்படம்… வெளியான அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘களவாணி’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் சற்குணமும், நடிகர் விமலும், அதன் வெற்றியைத் தொடர்ந்து ‘வாகை சூடவா’ மற்றும் ‘களவாணி 2’ போன்ற படங்களின் மூலம் மீண்டும் இணைந்து வெற்றிநடை போட்டனர்.

இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் சற்குணம் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்துக்கு ‘கலாட்டா பேமிலி’ என தலைப்பு வைத்திருப்பதாக, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கதாநாயகியாக அனிகா விக்ரமன் நடித்துள்ளார். மேலும் ஆனந்த் ராஜ், வேலராமமூர்த்தி, தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த குடும்ப படமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News