தற்போது கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளிவந்த படம் ‘கோர்ட் ஸ்டேட் vs நோ படி’. குறைந்த பட்ஜெட்டில் உருவான படம் பலமடங்கு வசூலைக் குவித்தது. ஏற்கனவே இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்த்தின் அப்பா தியாகராஜன் வாங்கியுள்ளார். இந்த படத்தை தமிழில் தியாகராஜன் இயக்குகிறார் என தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகின்றது.


