ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் அவரது 25-வது திரைப்படத்திற்கு ‘கிங்ஸ்டன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜி.வி. பிரகாஷின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. ‘கிங்ஸ்டன்’ படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார்.
இது ஜி.வி. பிரகாஷ் தயாரிக்கும் முதல் திரைப்படமாகும். இதில், நடிகை திவ்யபாரதி, ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். ‘பேச்சுலர்’ படத்திற்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி சென்னையில், நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். ‘கிங்ஸ்டன்’ கடலின் பின்னணியில் திகில் மற்றும் சாகசம் நிறைந்ததாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதில், கடலில் உள்ள மர்மங்களை கண்டறியும் மீனவரின் கதாபாத்திரத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ரசிகர்களிடம் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 6-ம் தேதி, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார், மற்றும் அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, டீசரை நடிகரும் இயக்குனருமான தனுஷ், தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படம் வருகிற மார்ச் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.