Wednesday, January 15, 2025

குட் பேட் அக்லி முதல் பைசன் வரை…பல புதிய படங்களின் ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய நெட்பிளிக்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பண்டிகை நாட்களில் புதிய படங்கள் தொடர்பான அப்டேட்டுகள் அதிகமாக வெளிவருவது வழக்கம். அவற்றின் அறிவிப்புகள், டிரைலர் வெளியீடுகள், மற்றும் பட வெளியீடுகள் என பல தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், முன்னணி ஓடிடி நிறுவனங்களில் ஒன்றான நெட்பிளிக்ஸ், அவர்கள் காப்புரிமை பெற்றுள்ள படங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிக்கும் ‘தக் லைப்’, அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’, சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’, துல்கர் சல்மான் நடிக்கும் ‘காந்தா’, பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ மற்றும் இன்னும் பெயரிடப்படாத ஒரு படம், துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’, வைபவ் நடிக்கும் ‘பெருசு’ ஆகிய படங்களின் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது.

இந்த படங்கள் தியேட்டர் வெளியீட்டின் பிறகே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News