நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ படம் அவரது இயக்கத்தில் வெளிவந்த நான்காவது திரைப்படமாகும். இதில் தனுஷுடன் அருண் விஜய், நித்யா மேனன், பார்த்திபன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி, இளவரசு, ராஜ்கிரண், கீதா கைலாசம் மற்றும் சத்யராஜ் போன்ற பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இதற்கிடையில், தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை ‘இட்லி கடை’ திரைப்படத்தை பார்த்துவிட்டு தனுஷை வாழ்த்தியுள்ளார். இதற்கு பதிலளித்து தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “மதிப்பிற்குரிய அண்ணாமலை அவர்களே, எங்கள் படத்தைப் பார்க்க நேரம் ஒதுக்கியதற்கு மிக்க நன்றி. உங்கள் அன்பான வார்த்தைகள், பாராட்டு மற்றும் ஊக்கத்திற்கு நானும் என் குழுவினரும் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஓம் நமசிவாய” என பதிவு செய்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, “அன்புள்ள சகோதரரே, உங்கள் பயணம் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும், உங்கள் பணி மேலும் உயரங்களை எட்டட்டும். முடிவில்லா வெற்றிகளையும், கடவுள் ஆசீர்வாதங்களையும் பெற வாழ்த்துகிறேன். ஓம் நமசிவாய!” என கூறியுள்ளார்.