Touring Talkies
100% Cinema

Tuesday, June 3, 2025

Touring Talkies

இந்திய சினிமாவின் வரலாற்றில் முதல் முறையாக இரண்டு கிளைமாக்ஸ் காட்சிகளோடு வெளியாகும் ஹவுஸ்ஃபுல் -5 திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஹவுஸ்ஃபுல் என்ற திரைப்படத் தொடர் அதன் ஐந்தாவது பாகமான ஹவுஸ்ஃபுல் 5, வருகிற ஜூன் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தத் தொடரின் முதல் பாகம் 2010ஆம் ஆண்டு வெளியானது. ஒவ்வொரு பாகமும் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, இந்த பிரான்சைஸ் ஐந்தாவது பாகம் வரை நீண்டுவந்துள்ளது. ஹவுஸ்ஃபுல் 5 படத்தில் அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன், ரித்தீஷ் தேஷ்முக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை பாலிவுட் இயக்குநர் தருண் மன்ஷுகானி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் சிறப்பு என்னவென்றால், ஹவுஸ்ஃபுல் 5 A, ஹவுஸ்ஃபுல் 5 B என இரண்டு வெவ்வேறு க்ளைமேக்ஸுடன் கூடிய வெர்ஷன்கள் உருவாக்கப்பட்டு, அவை திரையரங்குகளில் வெளியிடப்படுகின்றன. எந்த வெர்ஷனை பார்ப்பதற்கு ரசிகர்கள் விரும்புகிறார்களோ, அதற்கேற்ப டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.

சில திரையரங்குகளில் இந்த படத்தின் எந்தவொரு ஒரு வெர்ஷனே திரையிடப்படுகிறது. சில திரையரங்குகளில் இரண்டு வெர்ஷன்களும் வெவ்வேறு நேரங்களில் திரையிடப்படுகின்றன. இந்திய சினிமாவின் வரலாற்றில் இதுபோன்ற ஒரு புதிய முயற்சியை கையாண்டதற்காக, இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா பாராட்டப்படும் வகையில் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News