கடந்த சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 14ஆம் தேதி தெலுங்கில் வெளியான சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படத்தில் வெங்கடேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடன், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மீனாட்சி சவுத்ரி முக்கிய கதாநாயகிகளாக நடித்தனர். அனில் ரவிபுடி இயக்கிய இப்படம், குடும்பம் பார்க்கும் அளவுக்கு மிகுந்த கலகலப்பாக உருவாகி, மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, 300 கோடிக்கு மேல் வசூல் செய்து, பெரிய வெற்றிப்படமாக மாறியது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158022-1024x952.png)
இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேம் சேஞ்ஜர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் இருந்தது. அதே நேரத்தில் புஷ்பா 2 திரைப்படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. இதனால், சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படத்திற்கு பெரிய போட்டியின்றி நல்ல வசூல் கிடைத்தது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158025.jpg)
இதையடுத்து, சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் வெற்றி விழாவில் நாயகன் வெங்கடேஷ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறுகையில், “சங்கராந்திகி வஸ்துனம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. முதல் பாகத்தில் நிகழ்ந்த அதே மாதிரியான மேஜிக் இந்த தொடரிலும் இருக்கும். 2027 சங்கராந்தி பண்டிகை அன்று இப்படம் வெளியிடப்படும்” என்று உறுதிப்படுத்தினார்.