ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யாவின் 45 ஆவது படத்தில், அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இந்தப் படத்தில் மலையாள நடிகர் இந்திரன்ஸ், மலையாள நடிகை சுவாசிகா, நடிகை ஸ்விதா மற்றும் நட்டி நட்ராஜ் மற்றும் நடிகர் யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக, சூர்யாவின் 45 ஆவது படத்தை தயாரிக்கும் ட்ரீம்ஸ் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.
இந்திரன்ஸ், தமிழில் இதற்கு முன்பு “ஆடும் கூத்து” மற்றும் “நண்பன்” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதேபோல, சுவாசிகா தமிழில் “கோரிப்பாளையம்” உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர். சமீபத்தில் வெளியான “லப்பர் பந்து” என்ற படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.