Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

கவனத்தை ஈர்த்த விஜய் ஆண்டனியின் ‘ககன மார்கன்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் ஆண்டனி தனது 12-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவரது நடிப்பில் ‘ரோமியோ’, ‘மழைபிடிக்காத மனிதன்’, ‘ஹிட்லர்’ ஆகிய படங்கள் வெளியானாலும், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனால், விஜய் ஆண்டனி தற்போது வெற்றிப் படத்தை கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தொடர்ந்து ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார்.

இச்சமயத்தில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘மகா நடிகை’ என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், அவரது 12-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘ககன் மார்கன்’ என பெயரிட்டுள்ளனர்.

அட்டக்கத்தி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்துபோகும் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் எடிட்டரான லியோ ஜான் பால் இயக்குகிறார். பான் இந்திய திரைப்படமாக இது உருவாகிறது.

- Advertisement -

Read more

Local News