தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து வருகின்றார் முன்னணி நடிகர் ஜீவா. கற்றது தமிழ், ஈ, ரௌத்திரம், என்றென்றும் புன்னகை போன்ற திரைப்படங்கள் மூலம் புகழ்பெற்றார்.

கடைசியாக 2024ஆம் ஆண்டு வெளியான பிளாக் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றியைப் பெற்றது.
தற்போது ஜீவா தனது 45வது படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். இயக்குநர் நிதிஷ் சஹதேவ் இயக்கியுள்ள இப்படத்திற்கு ‘தலைவர் தம்பி தலைமையில்’ என பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.