Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

Fire படத்தின் மீது குற்றச்சாட்டு வைத்த ரச்சிதா மகாலட்சுமி புகார்… விளக்கமளித்த தயாரிப்பாளர் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரை நடிகையாக இருந்த ரச்சிதா மகாலட்சுமி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இன்னும் பிரபலமானார். பிக்பாஸ் பிரபலமான பாலாஜி முருகதாஸ் நடிப்பில் ‘பயர்’ என்ற படம் விரைவில் வெளிவர இருக்கிறது. ஆபாச காட்சிகள் அதிகம் நிறைந்த இந்த படத்தை விழிப்புணர்வு படமாக பார்க்க வேண்டும் என்று அந்த படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கூறியிருந்தார்.

இதற்கிடையில் ‘பயர்’ படத்தில் நடித்ததற்கு தனக்கு சம்பளமே தரவில்லை என்று பாலாஜி முருகதாஸ் பதிவிட்டார், ரச்சிதாவும் அதை ஆமோதித்து பதிவிட்டிருந்தார். ரச்சிதா தனது பதிவில் ‘பயர்’ படத்தை ஷிட் என்று கூறியதோடு தயாரிப்பாளரையும்‌ கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதனையடுத்து அதற்கு தற்போது பதிலளித்த தயாரிப்பாளர், ‘நீங்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு தான் நடித்துள்ளீர்கள். இலவசமாக நடிக்கவில்லை. அதற்கான ஆதாரங்கள் அக்ரிமெண்ட் அனைத்தும் உள்ளது. ‘பயர்’ படத்தில் நீங்களும் நடித்துள்ளீர்கள். இப்போது அதே படத்தை ஷிட் என்று விமர்சனம் செய்கிறீர்கள். அந்த படத்தில் தான் நீங்களும் நடித்துள்ளீர்கள்‌என்பதை மறந்து விடாதீர்கள் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News