Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

புஷ்பா 2 படத்துக்கு கடைசியில மூணு இசையமைப்பாளர்களா? இது புதுசா இருக்கே! #Pushpa2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் டிரைலர் நாளை (நவம்பர் 17) வெளியாக உள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஆனால், அவர் பின்னணி இசையமைப்பில் முழு கவனம் செலுத்தாமல், ஐதராபாத்தில் நடந்த அவரது இசை நிகழ்ச்சிகளில் அதிகமாக ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், படத்தின் இயக்குநர் சுகுமாரும், கதாநாயகன் அல்லு அர்ஜுனும், படத்திற்கான பின்னணி இசை பணிகளுக்காக நான்கு இசையமைப்பாளர்களை கொண்டு வர நிகழ்த்தியிருப்பதாக தகவல் வெளியானது.

இதற்கு பதிலளித்து, தமன், கடந்த வாரம் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது, “நான் ‘புஷ்பா 2’ படத்தில் ஒரு சிறு பகுதிக்கே இசையமைத்துள்ளேன். இப்படத்திற்கான பின்னணி இசையமைப்பில் சிலர் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். இயக்குநரும், அல்லு அர்ஜுனும் எனது வேலை குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளனர்,” என்று தெரிவித்துள்ளார். மேலும், தமன் தவிர, சாம் சிஎஸ், அஜனீஷ் லோகநாத் மற்றும் இன்னொரு இசையமைப்பாளர் இப்படத்தின் பின்னணி இசையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News