Touring Talkies
100% Cinema

Monday, April 7, 2025

Touring Talkies

திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ராமநாதன் காலமானார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் எம் ராமநாதன், 72, உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் இன்று(ஏப்., 7) காலை காலமானார்.நடிகர் சத்யராஜின் மேலாளராக பல ஆண்டுகள் பணியாற்றியவர் ராமனாதன். இவரது தயாரிப்பில் வாத்தியார் வீட்டுப் பிள்ளை, நடிகன், வள்ளல், திருமதி பழனிச்சாமி, பிரம்மா, உடன்பிறப்பு, வில்லாதி வில்லன் ஆகிய படங்களில் சத்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் விஜயகாந்த் நாயகனாக நடிக்க, பாரதிராஜா இயக்கத்தில் தமிழ்ச் செல்வன் படத்தையும் ராமனாதன் தயாரித்துள்ளார். வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவரின் உயிரின் இன்று காலமானார்.

- Advertisement -

Read more

Local News