மலையாள சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் ஜெயராம். கடந்த சில வருடங்களாகவே அவர் குணச்சித்திர வேடங்களில் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். இடைவெளிகளில் சில படங்களில் கதாநாயகனாகவும் அவர் நடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது ஜெயராம் மற்றும் அவரது மகன் காளிதாஸ் இருவரும் இணைந்து நடிக்கும் ‘ஆசைகள் ஆயிரம்’ என்ற படம் உருவாகி வருகிறது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், காளிதாஸ் இதற்கு முன்னதாக 2000ஆம் ஆண்டு ஜெயராம் நடித்த ‘கொச்சு கொச்சு சந்தோசங்கள்’ திரைப்படத்தில் சிறு வயதிலேயே ஜெயராமின் மகனாகவே நடித்து அறிமுகமானார். அந்த வகையில், 25 ஆண்டுகள் கழித்து தற்போது தனது தந்தையுடன் மீண்டும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கிறார். இந்தப் படத்தை ஜி. பிரஜித் இயக்குகிறார். தற்போது வெளியாகியுள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த அவர், நீண்ட இடைவேளைக்கு பிறகு தந்தையுடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.