Monday, December 30, 2024

இயக்குனர்களை விட ரசிகர்களுக்கு தான் அறிவு அதிகம்… இயக்குனர் பாலா OPEN TALK

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் பாலா அருண் விஜய் நடிப்பில் ‘வணங்கான்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜயுடன் சேர்ந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ‘வணங்கான்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக இயக்குநர் பாலா நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார். அந்த நேர்காணல்களில் அவர் இயக்குநர் பாலு மகேந்திரா குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அப்போது, இன்றைய ரசிகர்களின் மனநிலை குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும் போது, பாலா, “பாலு மகேந்திரா சாரிடம் நான் கற்றுக் கொண்ட முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒருவருக்கு பசி என்றால் அவருக்கு வாழைப்பழம் கொடு. ஆனால் அவன் உரிச்சுத் தின்ன முடியாதவனாக இருந்தால், அதை உரிச்சுக் கொடுத்து விடு. ஆனால், அதை நான் உன் வாயில் போட வேண்டும் என்று நினைத்து விடாதே, அந்த வேலை அவனுடையது என்பார்.

மேலும் அவர், இயக்குநர்கள் 10 அல்லது 15 படங்கள் மட்டுமே இயக்குகிறார்கள். ஆனால் ரசிகர்கள் நூற்றுக்கணக்கான படங்களை பார்க்கிறார்கள். இதனால், இயக்குநர்களை விட ரசிகர்களுக்கு அறிவு அதிகம். அவர்கள் எளிதாக ஏமாற மாட்டார்கள். நீங்கள் திரையில் சொல்ல வேண்டும்; அவர்கள் அதை புரிந்துகொள்வார்கள். அவர்களுக்கான பாணி இதுதான். அதேபோல், குச்சி எடுத்துக் கொண்டு படம் மூலம் வகுப்பு எடுக்க முடியாது. படம் எடுப்பது உன் வேலை, அதை நாங்கள் புரிந்துகொள்வோம் என்பதே அவர்கள் நினைப்பாக இருக்கிறது. இந்த அகம்பாவம் அனைத்து ரசிகர்களிடமும் காணப்படும், அது நல்லதே” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News