Touring Talkies
100% Cinema

Monday, March 17, 2025

Touring Talkies

ஜன நாயகன் பட அப்டேட் கேட்ட ரசிகர்கள்… உடனடியாக பதிலளித்த நடிகை மமிதா பைஜூ… என்ன சொன்னார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள திரையுலகில் அறிமுகமாகி, “பிரேமலு” திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் மமிதா பைஜு. இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். பின்னர், தமிழ் சினிமாவில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக “ரெபல்” படத்தின் மூலம் அறிமுகமானார்.

தற்போது, நடிகர் விஜய்யின் “ஜன நாயகன்” படத்தில் நடித்து வருகிறார். அதோடு, நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக “இரண்டு வானம்” என்ற படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர் ராம் குமார் இயக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகின.

இந்நிலையில், கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் ஆண்டு விழாவில், விஷ்ணு விஷால், மமிதா பைஜு மற்றும் இயக்குநர் ராம் குமார் கலந்து கொண்டனர். அப்போது விஷ்ணு விஷால், “முதன்முறையாக ஒரு முழுமையான காதல் படத்தில் நடிக்கிறேன்” என்று தெரிவித்தார். தொடர்ந்து, மமிதா பைஜுவிடம் விஜய்யின் ஜன நாயகன் படம் குறித்து கேட்கப்பட்டது அதற்கு”வரும் நாட்களில் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளிவரும்” என கூறினார்.

- Advertisement -

Read more

Local News