Touring Talkies
100% Cinema

Tuesday, May 6, 2025

Touring Talkies

கொடைக்கானலில் விஜய்யை கொண்டாடிய ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் நடித்து வரும் கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமான காட்சிகள் கொடைக்கானல் மலைப்பகுதியில் படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானலுக்குச் சென்றார். அங்கு தாண்டிக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பங்களாவில் தங்கி படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார்.

நேற்று தகவுமலை பகுதியில் மூன்றாவது நாளாக படப்பிடிப்பு நடைபெற்றது. விஜய் தங்கி இருந்த இடத்திலிருந்து மலைப்பாதையில் ஜீப்பில் சில கிலோமீட்டர்கள் பயணம் செய்த பின்னர், பாதை இல்லாத காரணத்தால் ஜீப்பிலிருந்து இறங்கி சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

அந்த வழியில், தகவுமலை நாதன் சிவன் கோவிலையும் அடைந்த விஜய், சிறிது நேரம் அங்கு ஓய்வெடுத்து விட்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் 3 கிலோமீட்டர் நடந்து சென்று, பின்னர் ஜீப்பில் தாண்டிக்குடிக்கு திரும்பினார். அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்ததால் விஜய் இன்று சென்னை திரும்பினார். இந்த பயணத்தின் போது, மலை கிராம மக்கள் வழியில் திரண்டு விஜயை காண வந்தனர். அந்த நேரத்தில், திறந்தவெளி ஜீப்பில் நின்ற விஜய், அனைவருக்கும் கையசைத்து வாழ்த்தினார். தாண்டிக்குடி அருகே பெண்கள் வரிசையாக நின்று ஆரத்தி எடுத்து, மலர்தூவி மரியாதையுடன் அவரை வரவேற்றனர்.

- Advertisement -

Read more

Local News