தற்போது தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிக்கடை படத்தில், நடிகர் அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில், இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடிவடையாததால் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் அருண் விஜய் இட்லிக்கடை படத்தின் போஸ்டரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, “இந்த படம் மிகப்பெரிய ஒன்றாக உருவாகிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் இப்படத்தின் வெளியீடு எப்போது என்பதை கேள்வியாக எழுப்பினர். இதற்கு பதிலளித்த அருண் விஜய், “நாங்கள் முதலில் படப்பிடிப்பை முடிக்க வேண்டும். அதுவரை தல வருகிறார், அவரைப் பாருங்கள்” என்று கூறியுள்ளார்.