ஆந்திர மாநிலம் தெனாலி என்ற பகுதியைச் சேர்ந்த நடிகை சமந்தாவின் தீவிர ரசிகர் ஒருவர், சமந்தாவுக்கு கோவில் கட்டியுள்ளார். சமந்தாவின் மார்பளவு சிலை வைத்து, தினமும் அந்த சிலைக்கு பூஜை செய்து வருகிறார். அந்த கோவிலுக்கு ‘சமந்தா கோவில்’ என்ற பெயர் வைத்துள்ளார். தினமும் பூஜை நடத்தி வரும் நிலையில், ஏராளமான பொதுமக்கள் தினமும் இந்த கோவிலுக்கு வருகை தருவதாக தெரிகிறது.கோவிலின் நுழைவு வாயிலில் சமந்தா கோவில் என பெயர் வைத்துள்ளார். சமந்தாவுக்கு கோவில் கட்டி இருப்பதை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் குடும்பத்துடன் கோவிலுக்கு திரண்டு வருகின்றனர். சமந்தாவுக்கு கோவில் கட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
