ஏசியன் சினிமாஸ் நிறுவனம் இதற்கு முன்பு மகேஷ்பாபுவுடன் இணைந்து ‘எஎம்பி சினிமாஸ் – ஏசியன் மகேஷ் பாபு சினிமாஸ்’ என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டரை ஐதரபாத்தில் திறந்தது. தற்போது அந்த நிறுவனம் ரவிதேஜாவுடன் இணைந்து ‘ஏஆர்டி சினிமாஸ் – ஏசியன் ரவி தேஜா சினிமாஸ்’ என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டரை திறந்துள்ளது. தனுஷ் நடித்து வெளிவந்த ‘குபேரா’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் என்ற நிறுவனம் இந்த ஏசியன் குரூப் நிறுவனத்தின் ஒரு அங்கம். தெலுங்குத் திரையுலகத்தில் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு வந்த சில நடிகர்கள் அடுத்து தியேட்டர் தொழிலிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
