மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு கதாநாயகி உதயமாகிறார். மகேஷ் பாபுவின் அக்கா மஞ்சுளா கட்டமனேனியின் மகள் ஜான்வி கட்டமனேனி விரைவில் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இதற்காக கடந்த சில மாதங்களாக நடிப்பு, நடன பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் இவரின் முதல்பட அறிவிப்பு வெளியாகும் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.


