தமிழில் ரஜினிகாந்த் நடித்து வெளியான ‘காலா’ படத்தின் மூலம் பின்னணிப் பாடகராக அறிமுகமானவர் அறிவு. ‘தெருக்குரல்’ என்ற ஆல்பத்தை வெளியிட்டதால் தெருக்குரல் அறிவு என்றும் அழைக்கப்பட்டார். ராப் சிங்கரான இவர் ராப் பாடல்களைப் பாடிப் பிரபலமானவர். கடந்த ஆறு வருடங்களில் நிறையப் பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் ஆல்பம் திரைப்படங்கள் என பாடி வருகிறார்.
இன்று சென்னையில் உள்ள அம்பேத்கார் மணிமண்டபத்தில் அவர் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் இசையமைப்பாளர் இளையராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் அவரது திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.